வலுவான பிடி !
நல்ல வலுவான பிடி !
மூச்சு முட்ட , புத்தி பேதலிக்க , தவிக்க
விடவே விடாது !
முயன்றாலும் முடியாததை
பிடித்தே தீர வேண்டும் - சகல சுகமும்
தெவிட்டினாலும் வேண்டும் !
உன்னை இழந்தாலும் நீ
நகர முடியாது - மனிதன் வாழ
வாழ்க்கை மட்டும் வாங்க முடியவில்லை !
மூளைக்குள் சூடு பரவ, உடலெங்கும்
தாகமெடுக்க , உறுதியாய், பாவமாய்
நீர் அருந்த மறுக்கும் மக்கள் !
எல்லாம் அடைந்து மேலும்
தேடும்போது, கேள்வி வரவில்லை ?
உன் உடம்பிலிருந்தாவது ? ஏன் இப்படி ?
ஊரோடு ஒத்து வாழ்கிறார்கள்
படிகளில் ஏறிக்கொண்டே இருக்கிறார்கள்
மொட்டைமாடி போன பிறகு - வானம் தெரியும் !
ரசிக்காமல் பயந்து போவார்கள்
வானம் பார்த்து ! பக்கத்து மாடி எத்தனை அழகு !
பாய்ந்து பிடிக்கலாமா ? வலுவான பிடி .