Friday, 9 January 2015

"மார்கழி" "mArgazhi"

மார்கழி 

மார்கழியின் அதிகாலைப்பொழுது 

லேசாக வருடிவிடும் மிதமான குளிர்க்காற்று 

காற்றையும் லேசாக்கும் கோவில் கீதம் 

ஆதவன் வரும்வரையில் விடிவெள்ளி ,

ஒவ்வொரு வீட்டு வாசலிலும் விளக்காக !

நட்சத்திரக் கோலங்களின் அழகைத் 

தோற்கடிக்க அழகுக்கோலங்கள் வாசலில்!

வாயிற்கோலத்தை விட அழகான 

பெண்களின் முகக்கோலங்கள் விளக்கொளியில் !

இக்கோலம் அக்கோலத்தைவிட அழகு 

அழகழகான அங்கலாய்ப்புகள் !

இறைவனைத் துயிலெழுப்ப தேவதைகளின் வருகை 

இறைவன் எழுந்தானா தெரியாது ,

கோவில் குருக்கள் துயில் விழித்தார் !

தேவதைகள் தரிசித்தார்கள்; தரிசிக்கப்பட்டார்கள் !

பிரசாதம் எங்களுக்கு அவர்களாக.

திவ்யநாம பஜனை ! திவ்யமான தரிசனம் !

வெண்பனிப் போர்வை ! வெண்மலர்ப்பூக்கள் !

பூக்களின் வாசனை நிறைத்தது மனதினை -

இறைவனே, விழித்தெழு ! அழகான காட்சிகள்

குளிர் பனியுடன் லேசான மழைத்தூறல்

அழகான ஈரம் பெண்களின் தலைகளிலும்

கொஞ்சம் உற்று நோக்கினால் உதடுகளிலும்

லேசான வெளிச்சம் , உயிர் விடும் பனிப்போர்வை

மரங்களுக்கு வருத்தம் , இலைகளில் நீர்த்துளி !


1991