OM VENKATESAYA !
மரத்தல்
வேஷத்திற்கு பஞ்சமேயில்லை
முகத்திற்கு மாவு பூசாமல் ,
முகமே முகமூடியாய் !
சிரிக்கும்போது உள்ளே
மலராமல் காய்ந்த சருகாய் !
ரொம்பத் திறமையாய் வன்மம் காட்டாமல்
தன் முகத்தை தரித்து சிரிக்கும் -
அனல் சுடும் நெடுநாள் கழித்து !
சாம்பல் பூத்த அடுப்பின் நெருப்பு
அரிதார முகம் - உள்ளே ?
சிலது சிலையாகி விடும் - வேஷமா ?
மாமல்லபுரச் சிற்பத்திற்கு கூட
உயிர் உண்டு - காரணம் -
சிற்பியா ? வேஷதாரிகளா ?
குமைந்து குமைந்து மனிதமே
மரத்துப் போகாதோ ?
மரத்தல் என்றாலே என்ன ?
கிளை பரப்பி நிழல் கொடுத்து
பூத்துச் சிரித்து வாசமாகி !
மரம் மரத்துப் போவதில்லையோ ?
No comments:
Post a Comment