“ஏதும் வேண்டா ! ”
யாரும் வேண்டா தகிக்கும் தனிமையிலை
ஏதும் வேண்டா தவிர்க்கும் தனிமை !
நாடும் நாடா துதிக்கும் ஒருமையிலை
நாடும் நாடாது உதிக்கும் ஒருமை !
போகும் போதாது போகும் வறுமையிலை
போகும் போதொன்று போகும் வறுமை !
சேரும் போதொன்று சேரும் வரவுயிலை
சேரும் போதொன்று சேரும் வரவு !
கட்டும் கட்டுண்டு நிற்கும் பேதமிலை
கட்டும் கட்டாண்டு நிற்கும் பேதம் !
முட்டும் அடங்காது முட்டும் எண்ணமிலை
முற்றும் அடங்காது முற்றும் எண்ணம் !
அடிகோலும் அடி கொண்டு கோரும் நாட்டமிலை
அடிகோரும் அடி கொண்டு கோரும் நாட்டம் !
அடி ஏனோ நிற்காது ஓடும் ஓட்டமிலை
அடியாரோ நிற்காது ஓடும் ஓட்டம் !
புவி கொள்ளும் தன் தொடர் காணும் ஆவலிலை
புவி கொள்ளும், தன் தொடர் காணும் ஆவல் !
புவி கொள்ளும் நாள் தேடி அஞ்சும் நெஞ்சமிலை
புவி கொள்ளும் நாள் தேட மிஞ்சும் நெஞ்சம் !
கூடக் கூடொன்று நாடும் ஏக்கமிலை
கூடும் கூடாது போகும் ஏக்கம் !
நாடிக் கேடின்றி தேங்கும் தேக்கமிலை
நாடிக் கேடின்றி தேங்கும் தேக்கம் !
தன் போல் தன் முன்னதன் போல் தோற்றமிலை
தன் போல் தன் முன்-அதன் போல் தோற்றம் !
தன்பால் தன் பின்னதன்பால் கொள்ளலிலை
தன்பால் தன் பின் - அதன் பால் கொள்ளல் !
கொண்டோர் கண்டதைக் கொண்டோர் மீதமிலை
கொண்டோர் கண்டு - அதைக் கொண்டோர் மீதம் !
கண்டோர் கொண்டதைக் கண்டோர் தோற்றமிலை
கண்டோர் கொண்டதைக் கண்டோர் தோற்றம் !
புரிந்தும் புரியாது போகும் போக்குமிலை
பிரிந்தும் பிரியாது போகும் போக்கு !
நேர்ந்தும் நேராது போகும் நோக்கமிலை
நேர்ந்தும் நேராது போகும் நோக்கம் !
No comments:
Post a Comment